பிறந்து 45 நாளான சிசுவை தாக்கிய தந்தை

பிறந்த 45 நாட்களான சிசுவை தாக்கிவிட்டு தந்தை தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பொகவந்தலாவ மேற்பிரிவு தோட்டத்தில்  இடம் பெற்றுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முறுகலாக மாறி கோபமடைந்த கணவன் பிறந்து 45 நாட்கள் நிறம்பிய தனது குழந்தையின் தலைபகுதியில் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக மனைவி பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்துள்ளார்.

நேற்று இரவு மது அருந்திவிட்டு வந்த கணவன் தன்னை கெட்டவார்த்தைகளால் ஏசியதாகவும் தன்னையும் தனது குழந்தையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் மனைவி பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் தாக்கபட்டதாக கூறப்படும் தாய் மற்றும் 45 நாள் நிரம்பிய குழந்தையும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதன் பின்னர் உடனடியாக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு  மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசுரிய தெரிவித்தார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.