பிறைந்துறைச்சேனை தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை 206A பிரதேசத்தில் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று 01.03.2017 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நளீம்   தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு  இடம்பெற்றது.
யுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்குவதன் மூலம்  அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் தொளபிக், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்  மற்றும் பயனாளிகளும் கலந்து சிறப்பித்தனர்
A