Breaking
Fri. Dec 5th, 2025
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மங்கள சமரவீர, டி.எம்.சுவாமிநாதன், விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இன்று  சுவிட்சர்லாந்து பயணமாகவுள்ளனர்.
சர்வதேச மாநாடுகளில் கலந்துகொள்ளும் நோக்கில் குறித்த மூவரும் நேற்று ( ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில்இ வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றுள்ள மங்கள சமரவீர ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலும்இ மீள்குடியேற்ற அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம்.சுவாமிநாதன் அகதிகளுக்கான சர்வதேச மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அத்துடன் சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்துகொள்வார்.
குறித்த மாநாடுகளில் பங்கேற்கும் பொருட்டே இவர்கள் நேற்றைய தினம் அவசரமாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அநேகமாக இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post