புதிய அமைச்சரவை, வெள்ளிக்கிழமை பதவியேற்கும் – ரவி

புதிய அமைச்சரவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) காலை 11 மணிக்கு பதவியேற்கவுள்ளதாக ஐ.தே.கவின் பிரதித் தலைவர்களில் ஒருவரான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
45 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையாக அது அமையும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டியதோடு இதில், ஐ.தே.க.வுக்கு 33 அமைச்சரவை அமைச்சுகளும் , ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 12 அமைச்சரவை அமைச்சுகளும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு மேலதிகமாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளும் அன்றைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.