Breaking
Fri. Dec 5th, 2025

ஐந்து வயது சிறுமியான சேயா சந்தவமியை தானே கொலை செய்ததாக கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்தவின் மூத்த சகோதரர் ஒத்துக்கொண்டார் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். சேயா சந்தவமியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பியசாந்த மற்றும் அவரது அண்ணா ஆகிய இருவரும் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இதன்போதே, கொண்டையா, நீதவானிடம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றும் குற்றப்புலனாய்வு பிரிவினர் அறிவித்துள்ளனர். மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பு வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

By

Related Post