புத்தகாயாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க நடவடிக்கை

புத்தகாயாவிற்கு யாத்திரை சென்று அங்கு சிக்கியுள்ள 108 இலங்கையர்களை நாளை சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அசல வீரகோன் தெரிவித்தார்.
மேலும் அவர்கள் எதிர்வரும் 6ம் திகதி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.