புத்தளம் மதரஸதுல் நபவியாவுக்கு இலத்திரனியில் சாதனங்கள் மற்றும் கதிரைகள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம் அல் மதரஸதுல் நபவியாவுக்கு சுமார் 2 இலட்சம் ரூபா பெறுமதியான கதிரைகள், ஸ்மார்ட் TV (LED) மற்றும் சவுண்ட் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், மதரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழாவின்போதே மேற்படி உபகரணங்கள், உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வின், விசேட அதிதியாக வைத்தியர் திருமதி.திபாயா பங்கேற்றிருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத், AO அலிக்கான் மற்றும் அமைப்பாளர் M.M.M.முர்ஷித் உட்பட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.