Breaking
Sat. Dec 6th, 2025

ஈராக் தலைநகர் பாக்தாத்திலிருந்து தெற்கே 90 கி.மீ தொலைவில் உள்ள கர்பாலா நகரில் நடத்தப்பட்ட மூன்று கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.

புனித நகரமான கர்பாலாவில் அரசு அலுவலகங்கள் அருகே உள்ள வணிக பகுதிகள் மற்றும் வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றில் இந்த கார் குண்டுகள் வெடித்ததாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் 41 பேர் காயமடைந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய எண்ணிக்கையை மருத்துவ அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.

Related Post