புலமைப் பரிசில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்த தடை

தரம் 05இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இம்மாதம் 21ஆம் தகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வரும் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான நாட்களில் அவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல் மாத்திரமின்றி, அதுதொடரபான பதாகைகள்,  துண்டுப் பிசுரங்களை விநியோகித்தல், ஊடகங்கள் ஊடாக பிரசாரங்கள் மேற்கொள்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.