பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது

டந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி  யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.