பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (5) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் சாரதிகளுக்கு அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.