போக்குவரத்து சபையால் போதுமான அளவு வசதி பயணிகளுக்கு வழங்கல்

இலங்கை போக்குவரத்து சபையால் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போதுமான அளவு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றமையால் அவசியமான பகுதிகளுக்கு மாத்திரம் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், சொந்த ஊர்களுக்கு பிரதான நகரங்களில் இருந்து செல்லும் பயணிகளின் நன்மை கருதி தூரசேவை பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.