போலி வீசா மற்றும் கடவுச்சீட்டு தயாரிக்கும் கும்பல் சிக்கியது

போலி வீசாவைப் பயன்படுத்தி ஆட்களை கனடாவுக்கு அனுப்ப தயாராக இருந்த சந்தேகநபர்கள் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கர விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 200க்கும் அதிகமான போலி கடவுச்சீட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அந்த கடவுச்சீட்டுக்கள் மற்றும் வீசாக்களை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட சில கருவிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஒரு நபரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டு போலி கடவுச்சீட்டு மற்றும் வீசாக்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மாளிகாவத்தை, மருதானை மற்றும் புதுக்கடை ஆகிய பகுதில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.