ப்ரெடி கமமே மீதான தாக்குதலுக்கு அரசு கண்டனம்

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், ஊடகவியலாளர் ப்ரெடி கமமே மீது, நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையை அரசாங்கம் கண்டித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷனி குணதிலக்க விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ப்ரெடி கமகே, இன்று நீர்கொழும்பு நகர சபைக்கு அருகில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

சபையின் மாதாந்த ஒன்றுகூடல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற நிலையிலேயே இவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.