Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று பேர்லினில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர் பிராங்-வோல்டர் ஸ்டென்மியர், இலங்கையில் மாற்றத்துக்கான காரணவாதி என்று மங்கள சமரவீரவை புகழ்ந்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.இதேவேளை தமது விஜயத்தின் போது மங்கள சமரவீர, ஜேர்மனின் புத்திஜீவிகள் சபையில் உரையாற்றவுள்ளார்.

Related Post