Breaking
Fri. Dec 5th, 2025
– பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை பொலிஸ் திணைக்களத்;தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரீ.பி.சம்சூதீன் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி  மாவட்டத்திற்கான 14வது பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீ.பி.சம்சூதீனுக்கான பொலிஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்;தியட்சகர் காரியாலய வளாகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன் போது மட்டு-மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரீ.பி.சம்சூதீனுக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் ஜெயசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்கர் அனுருத்த பண்டார ஹக்மன உட்பட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் பிராந்தியங்களின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான 14வது பிரதிப் பொலிஸ் மா அதிபராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ரீ.பி.சம்சூதீன் இதற்கு முன்னர் நுவெரெலியா மாவட்ட பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post