மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு வௌியிடப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று பிற்பகல் 02.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.