மத்தல விமான நிலையம், நெற் களஞ்சியமானமை – பாராளுமன்றத்தில் வெடித்தது சர்ச்சை

மத்தல சர்வதேச விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்தப்படுதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மத்தல விமான நிலைய களஞ்சிய சாலைகளில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த செயற்பாடு மற்றும் நெல் அறுவடை தொடர்பில் விவாதிப்பதற்கு நேரத்தை ஒதுக்கி தருமாறு எதிர்க்கட்சிகள் கோரிநின்றன.
இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்தல விமான நிலையத்தின் களஞ்சிய சாலையில் நெல் களஞ்சியப்படுத்துவதற்கு எடுத்த தீர்மானம் மற்றும் மத்தல விமான நிலையம் தொடர்பில் இரண்டு விவாதங்களை நடத்துவதற்கு இடமளிக்க முடியும் என்றார்.
இந்நிலையில், தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சர்ச்சை எழுப்பியது. அமைச்சர்களின் எண்ணிக்கை தொடர்பில் சபாநாயகர் தீர்மானிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.