மத்திய கிழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள 9 இலங்கை பெண்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த 09 பெண்களுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா மற்றும் லெபனானில் பணிபுரியும் பெண்களுக்கே அந்நாட்டு நீதிமன்றங்களால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நீதிமன்றங்களின் தீர்ப்புக்களின் பிரகாரம்,

இலங்கையின் பெண்கள் சிலர் கல்லெறிந்து கொல்லப்படும் நிலைக்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.