மன்னார் உப்புக்குளத்தில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டன!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க  மன்னார், உப்புக்குளம் கிராமத்திற்கான வீதி விளக்குகள் பொருத்தும் பணி இன்று இடம்பெற்றது.

முன்னாள் நகர சபை உறுப்பினர் நஹுசீனின் மேற்பார்வையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.