Breaking
Fri. Dec 5th, 2025
மரண தண்டனை கைதிக்கான சிவப்பு நிற கைதி உடையுடன் எகிப்து முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்சி முதல்முறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு இராணுவ சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் முர்சி முகம்கொடுத் திருக்கும் ஐந்து வழக்குகளில் ஒன்றான கட்டார் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுக்காகவே ஞாயிறன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்ற சிறைக்கூண்டுக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கு ஆஜர்படுத்தப்பட்டிருந்த ஏனைய பிரதிவாதிகள் முர்சிக்கு ஆதரவாக கோசம் எழுப்பினர்.
ஏற்கனவே முர்சி மீதான மூன்று வழக்குகளில் அவர் குற்றம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான ஏனைய வழக்குகளும் இடம்பெற்று வருகின்றன. சிறையை உடைத்து தப்பியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் முர்சியின் மரண தண்டனை கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட தோடு அதே நீதிபதியால் உளவு பார்த்த குற்றச் சாட்டுகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டது.
இதில் முர்சி மீதான மரண தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அவருக்கு சிவப்பு கைதி உடை வழங்கப்பட்டுள்ளது. எகிப்திய ஒழுங்கு முறைக்கமைய பிரதிவாதிகள் வெள்ளை உடை அணிவ தோடு குற்றங்காணப்பட்டால் நீலநிற உடையும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் சிவப்பு நிற உடையும் வழங் கப்படும்.

Related Post