Breaking
Fri. Dec 5th, 2025

மழையினால் நீர் நிரம்பிய கிணற்றில் வீழ்ந்து 3 வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தில்லையடி உமாராபாத் மீள்குடியேற்றக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் முஹம்மது அசீம் அப்துர் ரஸ்ஸாக் (வயது 3) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இந்நாட்களில் பெய்த மழை காரணமாக தில்லையடி உமாராபாத் கிராமத்தில் அமைந்துள்ள உயிரிழந்த சிறுவனின் வீட்டிலுள்ள பணிவான பழைய கிணறு ஒன்றும் நீர் நிரம்பியிருந்துள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் குறித்த சிறுவன் பக்கத்து வீட்டுக்கு விளையாடச் செல்வதாகக் கூறி வீட்டைவிட்டுச் சென்ற சற்று நேரத்தில் கிணற்றிலிருந்து சத்தம் ஒன்று வந்துள்ளது.

உடனடியாக வீட்டார் சிறுவனைத் தேடிய போது பக்கத்து வீட்டில் சிறுவன் இல்லாததையடுத்து கிணற்றில் ஒருவரை இறக்கிப் பார்த்த போது சிறுவன் கிணற்றில் வீழ்ந்திருந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுவன் உயிரிழந்திருந்துள்ளார்.

இச்சிறுவனின் மரணம் தொடர்பில் இடம்பெற்ற மரண விசாரணையின் போது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து நீரில் மூழ்கி ஏற்பட்ட மூச்சுத்திணரல் காரணமாக ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கியதாக புத்தளம் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் தெரிவித்ததார்.

இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post