‘மஹிந்தவை தோற்கடித்தது நானே” : பொன்சேகா

– ஜவ்பர்கான் –

நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்ல வேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த பெருமை என்னையே சாரும் என  ஜனாநாக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவத்தார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜனாநாயக கட்சி நாடு முழுவதிலும் தனித்து போட்டியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவை தோற்றகடித்தது நான்தான். மஹிந்தவை சுற்றியிருந்த பலர் இப்போது இந்த அரசாங்கத்தையும் சுற்றியுள்ளனர். அவர்களையும் தோற்கடிக்க வேண்டும். மஹிந்தவை தோற்கடித்த எனக்கு அவர்களை தோற்கடிப்பது பெரியவிடயமல்ல என்றார்.