Breaking
Fri. Dec 5th, 2025

– பேரின்பராஜா சபேஷ் –

சட்ட விரோத துப்பாக்கியைப் பயன்படுத்தி மான் வேட்டையாடிய நபரொருவரை, மான் இறைச்சியுடன் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மாவடிஓடைப் பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட இவரை, ஏறாவூர் நீதிமன்றில் ஆஜர்செய்யவுள்ளதாகக் கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்ஆர்பீ சேனநாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்தி ரத்னவின் மேற்பார்வையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

By

Related Post