Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கையிலுள்ள 18 இலட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு செயற்பாடுகள் சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று (28) காலை 9.30 மணிக்கு, கண்டி வத்தேக  சமூக சேவைகள் திணைக்கள தொழிற்கல்வி மத்திய நிலையத்தில் சமூக சேவைகள் பணிப்பாளர் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

12.30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வினையடுத்து உடற் சுகாதார நிகழ்வுகள், பரா ஒலிம்பிக் இலக்குபடுத்தப்பட்ட விளையாட்டுப் பயிற்சிகளுக்கான  மாவட்ட பயிற்சி மத்திய நிலையம், கைவினைப் பொருள் உற்பத்தியை மேம்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கச் செய்தல் என்பன தொடர்ச்சியாக செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

By

Related Post