Breaking
Fri. Dec 5th, 2025

– எம்.ஆர்.எம்.வஸீம் –

மின்சார தடையானது அரசாங்கத்தின் சதியல்ல. மின்சார பொறியியலாளர்களின் அரசியல் சதிநடவடிக்கையாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று (17) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தடை குழப்பத்துக்கு அரசாங்கத்தின் சதிநடவடிக்கையென எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அரசாங்கம் இவ்வாறான செயலை மேற்கொண்டு மக்களை ஒருபோதும் அசௌகரியத்துக்கு ஆளாக்க விரும்பாது. இதனால் அரசாங்கத்தின் செல்வாக்கே இழக்கப்படும்.

ஆனால் மின்சார தடை தொடர்பாக மின்சார பொறியியலாளர்கள் கூறும் விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் திறமையற்றவர்கள் அல்ல. அவர்களுக்குள் அரசியல் சதி காரர்கள் இருக்கின்றனர் என்றே நாங்கள் நினைக்கின்றோம்.

எனவே மின்சார பொறியியலாளர்களின் பின்னால் இருந்து அவர்களை யார் வழிநடத்துகின்றார்கள் என்பதை அரசாங்கம் தேடிப்பார்ப்பதுடன் இதுபோன்ற நிலைமை மீண்டும் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

By

Related Post