மின்னல் தாக்கி 6 வீடுகள் சேதம்

பத்தேகம – இதுருபத்வல பகுதியில் மின்னல் தாக்கி ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மேலும், இதனால் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதோடு, குறித்த வீடுகளில் இருந்த மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த சிறுமி பத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.