முதல் மூன்று மாதங்களில் பேராதனை பூங்காவின் வருமானம் 160 மில். ரூபா

கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையில் பேராதனை தாவரவியல் பூங்காவின் வருமானம் 160 மில்லியன் ரூபாய் என அதன் பணிப்பாளர் கலாநிதி பெரமுனேகம அரசாங்க உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தெரிவித்தார்.
இவ்வருமானம் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் 600 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்கு காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.