முன்னாள் பொலிஸ்மா அதிபர் அரசியலமைப்பு சபையின் உபகுழுவிற்கு தெரிவு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன் அரசியலமைப்புக் குழுவின்உபபிரிவு குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தக் குழுவிற்கு சட்டமா திணைக்களத்தின் பிரதானசொலிஸ்டரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோத்தாகொடவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை அரசியலமைப்பு சபையில் உபகுழுக்களாக 5 குழுக்கள் இவ்வாறுசெயற்படுவதாகவும், அதன் நியமனங்கள் அனைத்தும் சுயேட்சையானது என்றும் இதில் உள்ளஅதிகாரிகளுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது.