Breaking
Fri. Dec 5th, 2025
வவுனியாவில்  பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நீதித்துறையே! காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரண தண்டனை வழங்கு உள்ளிட்ட வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

By

Related Post