Breaking
Sat. Dec 6th, 2025

வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான முன்னைய மற்றும் தற்போதைய தகவல்களைச் சேகரித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து ஜனாதிபதியிடம் புதன் கிழமை (11) கையளித்துள்ளார்கள்.

குறித்த அவ்வறிக்கையில், வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் ஜீ.பீ.எஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஆகாய விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட வில்பத்து தேசிய சரணாலய எல்லை நிர்ணயம், தவறாக முஸ்லிம் குடியேற்றங்களை உள்ளடக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்ட இடங்களை, தவறாக வில்பத்து தேசிய சரணாலய எல்லைக்குற்படுத்திய தவறை திருத்துவதற்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தின்போது காணி ஒதுக்குதலில் கடைபிடிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் மேற்குறித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பார் எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post