மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி பலி

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் 3ஆவது மாடியிலிருந்து விழுந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதானவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் மனநோய் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இவரது இறப்பு தற்கொலையா? அல்லது தவறி விழுந்தமையினாலா என்பது தெரியவரவில்லை எனவும் ஹம்பாந்தோட்டை பொலிஸார் கூறியுள்ளார்.

மேலும், மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.