மொஹமட் முஸம்மிலுக்கு விளக்கமறியல்

நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மிலை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டார் என்று ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது.