மோனோ ரயில் செயற்திட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையில் மோனோ ரயில் சேவையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு தற்போது கைவிட்டுள்ளது.

கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மோனோ ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதற்கான சாத்திய வள ஆய்வுகளும் நடைபெற்று, செயற்திட்டத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் மலேசிய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோனோ ரயில் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பதற்காக பாரிய தொகை செலவிடப்பட வேண்டி இருப்பதால் அத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக மோனோ ரயில் தொடர்பான எதிர்பார்ப்பில் இருந்த பொதுமக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.