யாழ்.பல்கலையில் பதற்றம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.பல்கலையின் சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இன்று  காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு  கோப்பாய் பொலிஸார் விரைந்து சென்ற போதும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல பொலிஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும்இ நிலமை தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.