“ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, வாபஸ் பெறுமாறு மைத்திரி கேட்கவில்லை”

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கேட்கவில்லை என மறுத்த முன்னாள் அமைச்சரும் மகிந்த ஆதரவு எம்.பி.யுமான  தினேஷ் குணவர்தன பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஒரு போதும்  வாபஸ் பெறப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (10) பிரதமர்  மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேராவால்  வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார் தினேஸ் குணவர்தன எம்.பி.tks