Breaking
Sat. Dec 6th, 2025
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரையும் அஸ்கிரிய மகாநாயக்க தேரரையும் சந்தித்து நல்லாசிகள் பெற்றுக் கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களுமான லக்ஷ்மன் கிரியெல்லஇ ரவூப் ஹக்கீம் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியமை நாட்டுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும் திறமையானவர்கள் என்பதால் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என மல்வத்து பீடத்தின் மஹா நாயக்க தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல பிரதமருக்கு மாபெரும் வரவேற்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன், பிரதமருடன் பிரதேச பொதுமக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

Related Post