Breaking
Fri. Dec 5th, 2025
இலங்கையின் 8வது நாடாளுமன்ற சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரிய தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றம் இன்று (o1) தமது முதல் அமர்வுக்காக கூடியுள்ளது.
இதன்போது கரு ஜெயசூரியவை சபாநாயகராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்தார். இதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா வழிமொழிந்தார்.
இந்தநிலையில் ஏனைய யோசனைகள் அற்ற நிலையில் கரு ஜெயசூரிய சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார்

Related Post