Breaking
Sat. Dec 6th, 2025
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றி உறுதியாகிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமக்கு நெருக்கமானவர்களிடம் ஹக்கீம் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது ரயில் பாதையில் தலையை வைத்துக்கொள்ளத் தயாரில்லை.
கடந்த காலங்களைப் போன்று இம்முறையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளருக்கு ஆதரளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால்,  ஜனாதிபதி மஹிந்தவின் வெற்றி நிச்சயமாகிவிடும்.
எனவே,  ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பது பயனற்ற செயலாகும்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படக் கூடிய ஒர் தலைவர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவினை திரட்டும் முயற்சிகளில் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post