Breaking
Fri. Dec 5th, 2025

ரஷ்யாவின் டாவோஸ் என அழைக்கப்படும் பிரசித்திபெற்ற சென் பீட்டர்ஸ் பேர்க்கில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மன்ற மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கலந்து கொள்ளுமாறு அந்த நாட்டின் பிரதிப் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம், 2 ஆம், 3 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.

இன்று (02) காலை கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ரஷ்யாவின் தூதுவர்  அலெக்ஸாண்டர் கார்ச்சேவ் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இந்த அழைப்பை நேரடியாக கையளித்து மாநாட்டில் பங்கு பற்றுமாறு அழைப்பு விடுத்தார்.

ரஷ்யத் தூதுவருக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான இந்த சந்திப்பின் போது இலங்கை ரஷ்யா நாடுகளுக்கிடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் பரஸ்பர வர்த்தகம் தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.

Related Post