Breaking
Mon. Dec 15th, 2025

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான கடிதம் தனக்கு இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தம்மை விலக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதியின் கையெழுத்துடன் தமக்கு கிடைக்க பெற்றதாக அவர் எமக்கு தெரிவித்திருந்தார்.

கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டமையே தம்மை விலக்கியமைக்கான காரணம் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related Post