லஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன் கைது

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பலாங்கொட – லுனுவல பிரதேசத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்லபட்டை கொண்டு சென்ற ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது அவரிடம் 2000 ரூபா லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள ஓப்பனாயக்க பொலிஸ் நிலைய சார்ஜன் இன்று பலாங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.