Breaking
Fri. Dec 5th, 2025
சந்தேகத்துக்குரிய மரணத்தை தழுவிய, ரக்பீ வீரர் வசிம் தாஜூடீன், மரணமாவதற்கு முன்னர் பயன்படுத்திய கைத்தொலைபேசி நுவரெலியா, அக்கரப்பத்தனை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பேச்சாளார் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.  2012ஆம் ஆண்டு தாஜூடீன் கொழும்பில் வைத்து விபத்து ஒன்றில் மரணமானதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அந்த மரணம் விபத்தால் அல்ல. கொலை என்று தற்போது தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த காலத்தில் நாரஹேன்பிட்டியில் உள்ள விருந்தினர் உபசரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் தமது மகனுக்கு தாஜூடீன் பயன்படுத்திய தொலைபேசியை வழங்கியுள்ளார்.
எனினும் அவருக்கு தாஜூடீனின் தொலைபேசி எவ்வாறு கிடைத்தது என்று விடயம் வெளியாகவில்லை.

Related Post