வடக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு நிலுவையுடன் சம்பளம்; அமைச்சர் றிஷாத்தின் கோரிக்கையை ஏற்றார் சத்தியலிங்கம்!

வடமேல் மாகாணத்தில் பணியாற்றி பின்னர் வடமாகாண சபையின் நிருவாகத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டு, அந்த மாவட்டத்தில் கடமையாற்றும் சுகாதார உதவிப் பணியாளர்களின் சம்பளத்தையும், நிறுத்தப்பட்டிருந்த மூன்று மாத நிலுவையையும் உடன் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை மாகாண அமைச்சர் சத்தியலிங்கம் பணித்துள்ளார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன், மாகாண அமைச்சர் சத்தியலிங்கத்தை 24/10/2016 அன்று சந்தித்து, மூன்று மாதகாலம் இந்தப் பணியாளர்களின் சம்பளம் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதனால், அவர்கள் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து, சம்பளத்தை நிலுவையுடன் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அமைச்சர் றிசாத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  மாகாண அமைச்சர் சத்தியலிங்கம், சுகாதாரா உதவிப் பணியாளர்களின் பிரச்சினைக்குத்   தீர்வை பெற்றுக் கொடுத்தார்.