Breaking
Fri. Dec 5th, 2025

வடக்கு மற்றும் தலைமன்னார் நோக்கி புறப்படும் புகையிரதங்களின் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் இன்று  தெரிவித்துள்ளது.

அதன்படி புதிய நேர அட்டவணைகள் வருமாறு,

கொழும்பு யாழ்பாணம் இடையில் சேவையில் உள்ள யாழ்தேவி கல்கிஸ்ஸையில் இருந்து காலை 05.50 மணிக்கு ஆரம்பமாகி கொழும்பு கோட்டையில் இருந்து காலை 06.35 இற்கு யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 02.37 இற்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளதுடன், பிற்பகல் 03.20 ற்கு காங்கேசன்துறையை சென்றடையவுள்ளது.

யாழ்தேவி யாழ்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்படும் போது, காங்கேசன்துறையில் இருந்து காலை 08.25 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து காலை 9.35 இற்கு யாழ்ப்பாணத்தையும், கொழும்பு கோட்டைக்கு பிற்பகல் 06.32 இற்கும் சென்றடையவுள்ளது.

ஞாயிற்றுக் கிழமைகளில் மாத்திரம் சேவையில் ஈடுபடக்கூடிய கடுகதிப் புகையிரதம், யாழ்ப்பாணத்திலிருந்து காலை 08.20 இற்கு பயணத்தை ஆரம்பித்து பிற்பகல் 04.25 இற்கு கொழும்பு கோட்டையை சென்றடையவுள்ளது.

இதுதவிர தலைமன்னாரிலிருந்து புறப்படும் புகையிரதம் காலை 07.30 இற்கு பயணத்தை ஆரம்பித்து, காலை 10.50 இற்கு அநுராதபுரத்தையும், பிற்பகல் 04.05 இற்கு கொழும்பு கோட்டைக்கு வந்தடையும்.

இந்த மாற்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்.

By

Related Post