Breaking
Mon. Dec 15th, 2025

அப்துல்லாஹ்

வயலுக்குச் சென்ற விவசாயியை புதன்கிழமை மாலையிலிருந்து காணவில்லை என அவரது மனைவி லட்சுமி பிள்ளையான் தம்பி (வயது 50) கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கல்முனை 1 சி பிரிவைச் சேர்ந்த தாமோதரம் பிள்ளையான் தம்பி (வயது 60) என்பவரே காணாமல் போயுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பயணித்த துவிச்சக்கர வண்டி கல்முனை உவெஸ்லி பாடசாலை மதிலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கண்டு பிடிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

வழமையாக வயலுக்குச் சென்று மாலை வீடு திரும்பும்போது நகத்திலுள்ள மதுபானச் சாலையொன்றுக்கும் சென்று மதுவை போத்தலில் வாங்கி எடுத்துக் கொண்டு வீடு திரும்புவதாகவும் ஆனால் நேற்றைய தினம் வயலுக்குச் சென்ற கணவன் வீடு திரும்பாத நிலையில் அவரது சைக்கிள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும் மனைவி லட்சுமி தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Related Post