Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வரிப்பத்தன்சேனை மஜீட் புரம் பாடசாலை அருகில் உள்ள, “மடுவத்தை” என்ற இடத்தை வேறு இடத்துக்கு மாற்றி, சுற்றுப்புறச்சூழலை சுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர்ரஹ்மான், மக்கள் காங்கிரஸின் உபதவிசாளர் நௌபர் மௌலவி உட்பட மக்கள் காங்கிரஸின் பிரதேசசபை உறுப்பினர்களான அன்வர் மற்றும் பாஹிமா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

“மடுவத்தை” பாடசாலைக்கு அருகாமையில் இருப்பதால், துர்நாற்றம் மற்றும் சூழல் மாசுறுகின்றது. இதனால் மக்கள் நீண்டகாலமாக அசெளகரியத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனை  முற்றாக நீக்க நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

 

Related Post