வற்வரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்களுக்கான வற்வரி (பெறுமதி சேர் வரி) அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (19) பிலியந்தல நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கெஸ்பெவ, பிலியந்தல, பொகுந்தர பிரதேச வர்த்தகர்களால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வற்வரி அதிகரிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.