வவுனியாவில் 13 வயது சிறுவனைக் காணவில்லை!

வவுனியா தரணிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது பாடசாலை மாணவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பெரியகோமரசன் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வடிவேல் ரவிக்குமார் (வயது 13) என்ற சிறுவன் 25ஆம் திகதி பாடசாலைக்கு சென்று இதுவரை வீடு திரும்பவில்லை.

அன்றைய தினம் குறித்த சிறுவன் பாடசாலை சென்று கல்வி கற்க மாட்டேன் எனவும் தான் வேலைக்கு செல்லப் போவதாவும் தாயாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த  சிறுவன் தொடர்பில் தகவல் அறிந்தோர் பின்வரும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.

வடிவேல் ராஜேஸ்வரி

077 – 2101553

077 – 2510154

077 – 0545615