Breaking
Fri. Dec 5th, 2025
வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதியில் திங்கள் கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கிப் பயணித்த மோட்டர் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் 2ஆம் கட்டை, அம்பலாங்கொட பகுதியில் பயணித்தபோது மாடு ஒன்றுடன் மோதி எதிரே வந்த ஆட்டோவுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த எச்.எம்.லஹிரு பண்டார (வயது 22) என்ற இளைஞன் மரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

By

Related Post